வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கவும் செய்கின்றன. அவ்வாறு ஒன்றிணையும் கிரகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். தற்போது செவ்வாய் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
புத்திகாரகனான புதன் வருகிற அக்டோபர் 02 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த அக்டோபர் 02 ஆம் தேதி தான் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமியில் துலாம் ராசியில் செவ்வாய் மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கை சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த அரிய கிரக சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இருப்பினும் இந்த கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வைக் காணக்கூடும். மேலும் புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும் வாய்ப்புள்ளது. இச்சேர்க்கையால் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். துணிந்து ரிஸ்க் எடுப்பீர்கள். இதன் மூலம் நல்ல பலன்களையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்களும் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களையும் பெறும் வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புக்கள் உள்ளன. உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
Tags:
Rasi Palan
