யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த வயது 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞன் ஆடைகளை மினுக்கிக் கொண்டிருந்தபோது மின் இணைப்பில் இருந்த கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here