யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள் , இடமாற்றல் என வெளியேறியமையால் , வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் , நோயாளர்கள் , எக்ஸ்ரே , அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் , எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின்றனர்.
இதனால் யாழ் . போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்திய பற்றாக்குறையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.