இன்றைய ராசிபலன் - 02.10.2025..!!!





மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகிறது. உறவுகளோடு நேரத்தை செலவழிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான உபயோகமுள்ள பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுபமான நாள் இன்று.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று சந்தோஷமாக இருப்பீங்க. மன நிறைவோடு உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல வெற்றியை கொடுக்கும். சந்தோஷம் பெருகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை தேவையற்ற சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாரிடமும் வீண் பேச்சு பேசாதீங்க. வாக்குவாதம் செய்யாதீங்க. இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனம் தேவை. தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நிறைய தண்ணீர் குடிக்கவும். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். கடைசி நேரம் வரை பதட்டமான சூழ்நிலை நிலவும். இருந்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. அவசரம் வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். எதிலும் பிரச்சனைகள் வராது. தடைகள் வராது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அம்பாளின் அருளால் வீட்டில் சுப காரியங்களும் நடக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். நாலு பேர் மத்தியில் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் சுப செலவுகளை உண்டாக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களால் முடிந்தால் இன்று இரண்டு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்‌. மனதிருப்தி அடைவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல வாய்ப்புகள் கைக்கூடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன நிறைவை அடைவீர்கள். புதிய முதலீடுகளை செய்யலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தியும் உண்டு.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கப் போகிறது. உங்களுக்கு ஆதரவாக நாலு பேர் நிற்பார்கள். பிரச்சனை என்று வந்தாலும் சரி, பாதிப்பு உங்களுக்கு வராது. பிரச்சனைகளில் இருந்து வெளிவர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தெரியாத மூன்றாவது நபரின் பேச்சை நம்ப வேண்டாம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியான விஷயத்தில் மனது ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக டென்ஷன் இருக்காது. நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல தூக்கம் இருக்கும். இந்த நாளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி உங்கள் பக்கத்திலேயே வந்து நிற்கும்.
Previous Post Next Post


Put your ad code here