இன்றைய ராசிபலன் - 08.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று பேசுவதை குறைத்து கொண்டால் போதும். உங்களுக்கான நல்லது நடக்கும். தேவையற்ற மனிதர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். மூன்றாவது நபர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. இறைவனின் மீது பாரத்தை போட்டு வேலையை துவங்குங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் மட்டும் அக்கறை காட்டினால் போதும். தேவையற்ற செலவுகள் வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுமையாக ஆர்வம் காட்ட முடியாத சூழ்நிலை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நன்மைகள் நடக்கும். எதிலும் திறமையாக சிந்திப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிகமாக அக்கறை காட்டுவீர்கள். உங்களை புரிந்து கொள்ளாத எதிரிகள் கூட, சரியாக புரிந்து கொள்வார்கள். நல்லது நடக்கும் நாள். பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று விவேகத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களை பேசி ஜெயிப்பதற்கு யாராலும் முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதுசாக சொத்து சுகமாகவும் வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும் நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கையில் இருக்கும் பணத்தை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. முதலீட்டில் அலட்சியம் வேண்டாம். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். ஜாமீன் கையெழுத்து எடுத்து போட வேண்டாம். உங்களுடைய பொருட்களை இரவலாக அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புது முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பொறுப்புகளை யாரிடமும் கொடுக்காதீங்க. உங்களுடைய சொந்த விஷயங்களை, குடும்ப விஷயங்களை வெளி நபரோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்‌.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். குடும்பத்தை பற்றிய சிந்தனை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். இருந்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. மனக்குழப்பத்திலிருந்து விடுபட முருகனை வழிபாடு செய்யுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும். கை நிறைய பணம் இருக்கும். சொத்து நகை சேரவும் வாய்ப்பு இருக்கு. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். கையில் எடுத்த எல்லா வேலையிலும் ஜெயித்து தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு தேவை. முக்கியமான வேலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும். தாமதத்தால் சில பல பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான மீட்டிங், பஸ் புக் பண்ணி இருக்கீங்க, ட்ரெயின் புக் பண்ணி இருக்கீங்கன்னா, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்திற்கு போயிருங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக இருப்பீர்கள். உங்களுடைய வேலையில் எந்த பின்னடைவும் இருக்காது. நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பீங்க. நேர்மையாக இருப்பீங்க. யாரையும் ஏமாற்ற மாட்டீங்க. மன நிறைவான நாள் இன்று.
Previous Post Next Post


Put your ad code here