மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். எந்த வேலையிலும் ஒரு துளிகூட சோம்பேறித்தனம் இருக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். டென்ஷன் குறைய கூடிய நாள் இந்த நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையற்ற டென்ஷன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது எந்த வேலையாக இருந்தாலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். நட்புறவோடு இந்த நாளை கழிப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலோடு தைரியத்தோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சம்பள உயர்வு பதவியை உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. குடும்ப சண்டைகள் தீரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தைப் பொறுத்தவரை முதலீட்டில் கொஞ்சம் கவனம் தேவை. புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல செய்தி வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் இருக்கும். அடக்கம் இருக்கும். பொறுமை இருக்கும். எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் அதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான இடத்தை பிடிப்பீர்கள். தோல்வி அடைந்த விஷயங்களை இன்று முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கான வெற்றி உங்களை தேடி வரும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு தூங்குவது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அதிர்ஷ்ட காற்று வீசும். நீங்கள் எதிர்பார்த்த நல்லது அல்லாமல், எதிர்பாராத பல விதமான நல்லது உங்களை தேடி வர போகிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொன் பொருள் சேர்க்க இருக்கும் வாரா கடன் வசூல் ஆகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகமாக வரும். சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். புதிய எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. மேலதிகாரிகளை அனாலசியமாக பகைத்துக் கொள்ளாதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன தொல்லைகள், சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள். பொறுமையாக இருக்க வேண்டிய நாள். கணவன் மனைவிக்குள் உண்மை இருக்க வேண்டும். பொய் இருக்கவே கூடாது .
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். வாழ்க்கை துணையை சரியாக புரிந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்துடன் நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாகும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமா இருந்துக்கோங்க.
Tags:
Rasi Palan