100 ஆண்டுகள் கழித்து தீபாவளியில் உருவாகும் இரட்டை ராஜயோகங்கள்: அதிர்ஷ்டசாலி ராசிகள் இவங்க தான்..!!!


பொதுவாக பண்டிகை நாட்கள் சிறப்பானவை. அதுவும் அந்த பண்டிகை நாட்களில் கிரகங்களின் நிலைகளால் யோகங்கள் உருவாகும் போது, இன்னும் சிறப்பானவையாகும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில் இந்நாளில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், தனது உச்ச ராசியான கடக ராசியில் இருந்து ஹன்ஸ் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகங்களை உருவாக்கவுள்ளார்.

இப்படியான இவ்விரு ராஜயோகங்களும் தீபாவளி நாளில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோங்களால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.

அதுவும் நிதி நிலையில் உயர்வையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். அதோடு நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்போது 100 ஆண்டுகள் கழித்து தீபாவளி நாளில் குரு பகவானால் உருவாகும் இரட்டை ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

ஹன்ஸ் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

துலாம்

ஹன்ஸ் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகங்களால் துலாம் ராசிக்காரர்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். அதோடு முடிவெடுக்கும் திறன்களும் அதிகரிக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் திறனை பாராட்டுவார்கள். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தீபாவளியில் உருவாகும் ஹன்ஸ் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் நிலை மேம்படும். புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை கவர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
Previous Post Next Post


Put your ad code here