இன்றைய ராசிபலன் - 10.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவியாகவும் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. முக்கியமான வேலைகளை நாளை தள்ளிப் போடுவது நல்லது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருப்பீங்க. வேலையும் வியாபாரமும் சுறுசுறுப்பாக நடக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் சீராகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் திறமை வெளிப்படும். உற்சாகமாக இருப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். அறிவுபூர்வமாக பேசுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விவசாயிகளை பொருத்தவரை இன்று கைநிறைய லாபம் சம்பாதிப்பீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்திற்கு குறைவிருக்காது. வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடந்து முடியும். மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். உங்களுடைய வியாபாரத்திற்கு நண்பர்கள் உறவுகள் உதவியாக இருப்பார்கள். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனம் தேவை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உங்களை, நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். எந்த வேலையை கொடுத்தாலும், உங்களால் முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு, விஸ்வரூப வெற்றியை காண்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று தனலாபம் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. நீண்ட நாள் வாரா கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஒரு முடிவுக்கு வரும். பங்காளி சண்டைகள் சரியாகிவிடும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியமான நாளாக இருக்கும். எதிலும் திறமையாக செயல்படுவீர்கள். பேச்சில் புத்திசாலித்தனம் திறமை வெளிப்படும். வசீகர தோற்றத்தால் அடுத்தவர்களை எளிதில் கவரும், யுக்தி இன்னைக்கு உங்களுக்கு இருக்கும். காதலை வெளிப்படுத்துங்கள். நல்ல செய்தி உண்டு.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். எதிரிகளை கண்டு அஞ்ச மாட்டீர்கள். பொய் சொல்ல மாட்டீர்கள். நேர்வழியில் நடப்பீர்கள். இதனாலேயே இன்று பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் பயப்படாதீங்க. கடவுளின் துணை உங்களுக்கு இருக்கு.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நிதானம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் அவசரப்படக்கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். சுபகாரிய தடைகள் வரும். இறைவழிபாடு செய்து விட்டு உங்களுடைய இந்த நாளை துவங்குங்கள். நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவாக இருக்கும். எந்த முடிவை எடுக்க வேண்டும். எந்த முடிவை எடுக்கக்கூடாது என்று தீர்க்கமாக இருப்பீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் முதலீட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயனுங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற கடன் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்யுங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here