மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பின்னடைவுகள் வரலாம். கவனத்தோடு செயல்படவும். மூன்றாவது மனிதரை நம்ப வேண்டாம். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. யாருக்கும் எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்காதீங்க. பேசுவதை குறைத்துக் கொண்டால் இன்று பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழப்பமான பிரச்சனைகளுக்கு கூட தெளிவான முடிவை எடுப்பீர்கள். உங்களுடைய முன்னேற்றம் விரைவாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சரியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். அன்றாட வேலையில் கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீட்டின் போது கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன உறுதியோடு செயல்பட வேண்டும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை உங்களுக்கு கொடுக்கும். ஒருமுறை தோல்வி அடைந்த உடன் துவண்டு போகாதீங்க. மாணவர்களுக்கு கல்வியில் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும் .
தேவையற்ற சேர்க்கை, தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்த சேர்க்கும். முன் பின் தெரியாத நபரிடம் பழக வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கடவுள் சில சோதனைகளைக் கொடுக்கப் போகின்றான். கவனமாக செயல்படுங்கள். நேர்வழியில் நடந்து கொள்ளுங்கள். குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். அரசுக்கு புறம்பான வேலையை பார்க்காதீங்க. எந்த விஷயத்திலும் பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். வேலை வியாபாரத்தில் விட்ட இடத்தை மீண்டும் படித்து வெற்றி வாகை சூடுவீர்கள். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்த நண்பர்களும் உறவுகளும் உறுதுணையாக செயல்படுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலையில் மேலதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகுவீர்கள். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். டிஸ்கவுண்ட் விற்பனையில் எந்த பொருளையும் வாங்காதீங்க. நிறைய பணம் செலவு செய்யாதீங்க. அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. மூன்றாவது நபரை கண்மூடி தனமாக நம்ப வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இறையருள் பரிபூரணமாக இருக்கிறது. பொன் பொருள் சேர்க்கை இருக்கும் நல்லது நடக்கும் நாள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரக்கூடிய நாள். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். நிதி நிலைமை சீராகும். குடும்ப பிரச்சினை தீரும். பொன் பொருள் சேர்க்க இருக்கும். தீபாவளியை கொண்டாட தயாராகி விடுவீர்கள். எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
Tags:
Rasi Palan