மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மிகவும் பக்குவமாக நடந்து கொள்ளுவீர்கள். பொறுமை இருக்கும். அடுத்தவர்களுடைய மனதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் பக்கம் என்ன தவறு இருக்கிறது என்று சிந்தித்து செயல்படுவீர்கள். இதனால் வாழ்க்கையின் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். அனுபவரீதியாக நிறைய நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள். எதிலும் ஜெயித்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும் நாள். பாராட்டு கிடைக்கும். நல்லது நடக்கும். நிதி நிலைமை சீராகும். தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி விடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று உற்சாகமாக செயல்படுவீர்கள். சோம்பேறித்தனம் இருக்காது. உங்களுக்கான கடமைகளில் இருந்து பின்வாங்க மாட்டீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று மாலை ஷாப்பிங் செல்வீர்கள். நிறைய பணத்தை செலவு செய்யப் போறீங்க பார்த்துக்கோங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான போட்டி இருக்கப் போகிறது. ஆரோக்கியமான போட்டி என்றுமே வாழ்க்கைக்கு நல்லது. பொறாமை தான் இருக்கக் கூடாது. போட்டி இருக்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. என்ஜாய் பண்ணி, இன்னைக்கான வேலையை செய்வீங்க. வெற்றி இறுதியில் உங்களுக்கே கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுப காரியம் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன எதிர்ப்புகள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சுக்குவீங்க. பிரச்சனை இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தன லாபம் கைநிறைய கிடைக்கப்போகிறது. ஏதாவது ஒரு வகையில் பணம் வரும். சில பேருக்கு போனஸ் வரும். சில பேருக்கு வாரா கடன் வசூல் ஆகும். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்டெடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பிள்ளைகளுடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு கைநிறைய பணம் இருக்கும். மனது நிறைய சந்தோஷம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அதே கவனத்தையும் சந்தோஷத்தையும் செலுத்தினால் இன்னைக்கு தப்பித்து விடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்யலாம். விவசாயிகளுக்கு புதிய ஐடியாக்கள் நல்ல வெற்றியை கொடுக்கும். தைரியமாய் இருங்க. உங்க பணம் என்னைக்கும் வீணா போகாது. நஷ்டம் அடையாது. உங்களுக்கானது எப்படியாவது எந்த ரூபத்தில் யாவது உங்களைத் தேடி வந்துவிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே உங்க வாழ்க்கையில, நீங்க நினைச்ச மாதிரி உயர்ந்த இடத்திற்கு செல்ல இன்று மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் கூடும். இழந்த சொத்து சுகம் செல்வம் மரியாதை இவைகளை கடவுள் திரும்பவும் உங்களிடமே கொடுத்துவிடுவார். அதை இனிமேல் பத்திரமா பாத்துக்கோங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மனக்கவலை இருக்கும். பழைய கஷ்டங்களை மனது மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் அதற்கு நீங்கள் இடம் கொடுக்காதீர்கள். பிரச்சனையில் இருந்து வெளிவந்து வேலையில் கவனம் செலுத்தினால் மட்டுமே, இந்த நாள் இனிய நாளாக இருக்கும். கடவுளை துணையாக அழைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் உங்கள் கை ஓங்கி நிற்க வேண்டும். இன்று அயராது உழைப்பீர்கள். உங்களுடைய சிந்தனை மேலோங்கும். புது மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மையை செய்யும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் தைரியமாக உங்கள் முடிவை வெளிப்படையாக சொல்லுவீர்கள். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள். இதனாலேயே புது எதிரிகள் உருவாகுவார்கள். வேலையில் மேனேஜர் தொல்லை தாங்க முடியாது. தீபாவளி வரைக்கும் இதையெல்லாம் கொஞ்சம் சமாளித்து தான் ஆக வேண்டும். பிறகு நல்ல நேரம் பிறக்கும் கவலைப்படாதீங்க.
Tags:
Rasi Palan