இன்றைய ராசிபலன் - 17.10.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் துவங்கி விடுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும் நாள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். 100 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளை, 50 ரூபாய்க்கு வாங்கி லாபம் பார்ப்பீர்கள். தீபாவளி ஷாப்பிங் துவங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பர்ஸ் காலியாகும். நீண்ட தூர பயணங்களின் போது கவனம் தேவை.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உடல் சோர்வோடு காணப்படுவீர்கள். வேலை பளு அதிகமாக இருக்கும். விடுமுறை நாளுக்கு ஊருக்கு செல்ல எல்லா வேலைகளையும் முன்கூட்டியே செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க. எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். அவசரம் கூடாது. நிதானம் தேவை. ஒரு வேலையை இரண்டு முறை செய்வது போல சந்தர்ப்பம் சூழ்நிலை அமையும். ஜாக்கிரதை, நீண்ட தூர பயணங்களின் போது கவனம் இருக்கட்டும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீபாவளி பண்டிகை உங்கள் வீட்டில் சந்தோஷமாக துவங்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி இருக்கும். எல்லா வேலைகளும் நேரத்திற்கு நடந்து முடியும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வாராக்கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும். தீபாவளி பண்டிகையை கொண்டாட தேவையான பணமும் கிடைத்துவிடும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை தான். பிரச்சனைகளை கடந்து நிம்மதி அடையக்கூடிய நாள். தீபாவளி போனஸ் கிடைத்துவிடும். குடும்பத்திற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் முன்கோபம் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடந்துக்கோங்க. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இந்த நாள் முழுவதும் இஷ்ட தெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் கூடக்கூடிய நாளாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். இழந்த அந்தஸ்தை மீண்டும் அடைவீர்கள்‌. வருமானம் பெருகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் இருக்கும். வீட்டில் பண்டிகை மகிழ்ச்சி துவங்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று தேவையற்ற பதட்டம் இருக்கும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். பணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பீர்கள். கவலை வேண்டாம். உங்களுக்கு நல்லது நிச்சயம் நடக்கும். இறைவனின் மீது பாரத்தை போட்டு உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். பதட்டத்தோடு புது வேலைகளை துவங்க வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதி கிடைக்கும். சொந்த ஊர் செல்லக்கூடிய பயணங்கள் நல்லபடியாக நிறைவேறும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகளுக்கு போகக்கூடாது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் கூடாது. நிதானமாக இருந்தால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நிறைவடையும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
Previous Post Next Post


Put your ad code here