மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். குழப்பங்களில் இருந்து வெளி வருவீர்கள். உங்களுடைய வேலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வேலையில்லாமல் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் வரும். வெற்றி கிடைக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற டென்ஷன் இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு மறுத்து பேச ஒரு கூட்டம் இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. இதனால் சில பல பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்றைக்கான தோல்வி உங்களுக்கு எதிர்காலத்தில் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். கவலைப்படாதீங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். கைநிறைய பணம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட தூர பயணங்களின் போது மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகமான எதிர்பார்ப்பு உங்களுக்கு சில ஏமாற்றங்களை உண்டு பண்ணலாம். கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு ஈடுபாடு தேவை. இறைவழிபாடு செய்யுங்கள். தேவையில்லாத பிரச்சனைகளை எண்ணி மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருக்கும் எதிரிகளை போட்டி போட்டு வெற்றி காண்பீர்கள். உங்களுடைய முடிவில் தெளிவு இருக்கும். நீங்கள் எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது. முகத்திற்க்கு நேராக நீங்கள் பேசும் பேச்சு அனைவரையும் வியக்க வைக்கும். வெற்றிவாகை சூடுவீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். புது மனிதர்களின் சந்திப்பு முன்னேற்றத்திற்கு உதவி புரியும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில், ஆர்வம் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மன நிம்மதி, இன்று நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். தேவையற்ற குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற மறதியால் பிரச்சனைகள் வரலாம். முக்கியமான மீட்டிங் முக்கியமான வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வெளியில் செல்லும்போது கவனமாக இருந்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பெருமையாக உங்களுடைய வெற்றியை வெளியில் சொல்லலாம். நீங்கள் அடுத்தவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள். யாரிடம் எல்லாம் அவமானப்பட்டீர்களோ, அவர்களிடம் எல்லாம் நல்ல பெயர் எடுப்பீர்கள். எதிரிகள் முன்பு வாழ்ந்து காட்டக் கூடிய நாள் இன்று.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். நிறைய நல்ல விஷயங்களை அலைந்து திரிந்து வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக செய்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். நிதி நிலைமை பற்றாக்குறையோடு இருக்கும். அலைச்சல் இருந்தாலும், கடவுள் உங்களுக்கு பெருசாக எந்த பிரச்சனையும் கொடுக்க மாட்டான். சந்தோஷமாக இருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத நட்பு வட்டாரத்திலிருந்து ஒதுங்கியே இருங்கள். நேர்வழியில் நடந்து கொண்டால் எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். ஆனால் அதை சமாளிக்கக்கூடிய தெம்பு உங்களிடத்தில் இருக்கும். கவலையே படாதீங்க இறைவனின் மீது பாரத்தை போட்டு உங்களுடைய வேலைகளை கவனியுங்கள்.
Tags:
Rasi Palan