மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் மனநிறைவு இருக்கக்கூடிய நாளாக அமையப்போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்த நல்ல காரியங்கள் வெற்றி அடையும். காரிய தடைகள் விலகும். நிதிநிலைமை சீராகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய கடமைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்லது நடக்கும் நாள். நீண்ட தூர பயணங்களில் மூலம் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். சந்தோஷம் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனநிறைவு கிடைக்கும். தேவையற்ற குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரிவு சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வந்தாலும் அதை சரி செய்யக்கூடிய திறமை வெளிப்படும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று காலை பொழுதில் கொஞ்சம் தடைகள் தடங்கல்கள் வரும். விடாமுயற்சியோடு செயல்படுங்கள். இந்த நாள் இறுதியில் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். நேரத்தை வீணடிக்கக்கூடாது. மனதை தேவையில்லாமல் அலைபாய வைக்கக் கூடாது. இறைவனின் மீது பாரத்தை போட்டு கடமையை மட்டும் செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கைநிறைய சம்பளம் கிடைக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடக்கூடிய நல்ல நேரம் கை கூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான சாந்தமான நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய போராட்டமே உங்களை சுற்றி நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டீர்கள். உங்களை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்வீர்கள். இதனால் வேலையிலும் வியாபாரத்திலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்படுங்கள். தேவையில்லாத நண்பர்களோடு சேர்ந்து அனாவசியமாக வெளியில் ஊர் சுற்ற வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன மன குழப்பம் இருக்கும். எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவை எடுக்கக் கூடாது என்பதில் தடுமாற்றம் இருக்கும். உங்களுடைய கவனத்தை சிதற விடாதீர்கள். நல்ல அனுபவ சாலிகளுடைய பேச்சை கேட்கலாம். இல்லையென்றால் முக்கியமான முடிவு எடுப்பதை நாளை தள்ளி போடலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வருமானம் சீராகும். எதிரி தொல்லை விலகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கு. நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனது சோர்வடையும். எதிர்பாராத துன்பங்களை சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. உடனே பயந்து விடக்கூடாது. இறைவனின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். பிரச்சனைகளை எதிர்த்து மோத தைரியத்தை வர வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். பெரிய அளவில் இருக்கும் பிரச்சனைகளை கூட, சுலபமாக உங்களுடைய சாதுரியத்தை பயன்படுத்தி சரி செய்து விடுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். நிதி நிலைமை மேலோங்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று இரக்க குணத்தோடு செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பை காட்டுவீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். செலவை குறைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
Tags:
Rasi Palan