ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுமே தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த தொடர்ச்சியான இயக்கத்தில் சில கிரகங்கள் ஒன்றோடொன்று இணைந்து சில அரிய கிரக சேர்க்கைகளை உருவாக்குகின்றன. இந்த கிரக சேர்க்கைகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையான மாற்றங்களா அல்லது எதிர்மறையான மாற்றங்களா என்பது கிரகங்கள் அந்த ராசியின் எந்த வீட்டில் அமர்கிறது என்பதைப் பொறுத்தது.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் வேகமாக நகரும் கிரகமாகும், அதே நேரத்தில் கேது மிகவும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். அக்டோபர் 16, 2025 அன்று, அவர்கள் சிம்ம ராசியில் இணைந்து, ஒரு சக்திவாய்ந்த இணைப்பை உருவாக்குகிறார்கள். இந்த தனித்துவமான கிரக இணைப்பின் தாக்கம் ஒவ்வொரு ராசியிலும் வித்தியாசமாக பிரதிபலிக்கும். இந்த ஜோதிட நிகழ்வு 3 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியின் 5-வது வீட்டிற்கு கேது நகர்வது அவர்களுக்கு தைரியத்தையும், குழந்தைகளைப் பற்றிய நல்ல செய்தியையும் தருகிறார். சந்திரன், கேதுவுடன் இணைவதால், அவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இந்த கிரக சேர்க்கையால் அவர்கள் இதுவரை எதிர்கொண்டு வந்த நிதி பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. அவர்களின் கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அறுவடை செய்யப்போகிறார்கள்.
பணியிடத்தில் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்ட பணிகளைத் திறமையாகச் செய்ய அவர்களால் முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத லாபத்தை அடையலாம். திருமண வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆம் வீட்டில் கேது சஞ்சரிப்பது அவர்களின் தைரியத்தையும், திறமையையும் அதிகரிக்கும். இந்த கிரக இணைப்பால் அவர்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரலாம், மேலும் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் அதிக வெற்றிகளைக் குவிப்பார்கள். பணியிடத்தில் அவர்களின் முயற்சிகள் பாராட்டப்படும், மேலும் தொழில் வளர்ச்சிக்கான சரியான வாய்ப்புகள் தேடிவரும்.
வேலை அல்லது வணிகம் முன்னேற்றத்திற்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. வருமானத்திற்கான புதிய வழிகள் திறப்பதால் அவர்களின் நிதிநிலை முன்னேற்றமடையும். இந்த பெயர்ச்சியால் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். அவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆம் வீட்டில் கேது உங்கள் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த கிரக இணைப்பால் அவர்கள் பல்வேறு திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க அவர்களிடம் ஆற்றல் நிறைந்திருக்கும், மேலும் அதன்மூலம் பாராட்டுகளைப் பெறலாம். வேலையில், அவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும், மேலும் அவர்களின் கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும். பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிப்பதால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் .
அவர்களின் மன ஆரோக்கியத்தில் சரியான கவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் அனைத்து தீய எண்ணங்களையும் கடந்து வாழ்க்கையில் சரியான சமநிலையைக் காணலாம். குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும், மேலும் அவர்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம். உடல்நல பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க முடியும்.
Tags:
Rasi Palan