பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறந்ததும் அதனை ஆலயத்தில் விற்று வாங்குவார்கள். பழங்கள், பொருட்கள், தென்னை, கமுகு மரங்களும் குழந்தை விற்று வாங்கும்போது ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்குவதும் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வாகும்.
இவ்வாறு குழந்தையை ஆலயத்தில் விற்று வாங்குவதனால் நோய்நொடியின்றி குழந்தை ஆரோக்கியமாகவும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழும் என்பதும் ஐதீகம்.
அந்தவகையில் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
