திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் - பட்டா - மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து, மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news
