யாழில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று மாத குழந்தை..!!!



யாழில் பிறந்து மூன்று மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.

கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த  குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை (23.07.2025) அன்று பிறந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று (29) தாயார் குறித்த குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் சிறிது நேரத்தில் மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்ததையடுத்து குழந்தை மயங்கியுள்ளது.

இதையடுத்து, தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here