யாழில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் ஒருவர் நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Previous Post Next Post


Put your ad code here