ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். இவர் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் சூரியன் வருகிற நவம்பர் 16 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். சூரியன் செவ்வாயின் ராசிக்குள் செல்வதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளார்கள்.
குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி நிலையில் உயர்வையும் காணப்போகிறார்கள். அதோடு நீண்ட காலமாக சிக்கியிருந்த பணமும் கைக்கு வந்து சேரும். இப்போது நவம்பர் மாத சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வுகளில், போட்டிகளில் வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தன்னம்பிக்கை, தைரியம் போன்றவை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார்கள். வீடு வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். இது உயர் அதிகாரிகளை ஈர்த்து, உங்களுக்கு பாராட்டை வாங்கித் தரும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து மேம்படும். முதலீடுகள் அல்லது வணிகத்தில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். சூரியனின் ஆசியால் உங்களின் தலைமைத்துவம் சிறப்பாக இருக்கும்.
Tags:
Rasi Palan
