10 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்..!!!


ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். அதுவும் இவர் ஒரு ராசியில் 21 நாட்கள் வரை இருப்பார். இது தவிர குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

அதுமட்டுமின்றி கிரகங்களிலேயே அடிக்கடி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவரும் இவரே ஆவார். இப்படிப்பட் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இதுவரை விருச்சிக ராசியில் பயணித்து வந்த புதன், நவம்பர் 23 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். மேலும் நவம்பர் 22 ஆம் தேதி குரு பகவானின் நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த நட்சத்திரத்திற்கு புதன் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் செல்கிறார்.

புதனின் இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இதன் விளைவாக வணிகத்தில் நல்ல லாபமும், தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணக்கூடும். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கன்னி

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. முக்கியமாக புத்திசாலித்தனமும், தைரியமும், விவேகமும் அதிகரிக்கும். இக்காலத்தில் சில முக்கியமாக முடிவுகளை எடுப்பீர்கள். குறிப்பாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிகம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் திறக்கப்படும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டக் கதவு திறக்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன்னம்ப்பிக்கை அதிகரிக்கும். உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
Previous Post Next Post


Put your ad code here