இன்றைய ராசிபலன் - 13.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். குறிப்பாக இளைஞர்கள் பெரியவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும். செலவை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன அமைதி கிடைக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். எதிரி தொல்லையிலிருந்து தப்பிப்பீர்கள். வேண்டாத சிக்கல்கள் எல்லாம் தானாக சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிறைய நல்ல காரியங்களை செய்வீர்கள். ஆக்கபூர்வமாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்ல முன்னேற்றம் காணப்படும். வீட்டில் இருக்கும் முதியவர்கள் குழந்தைகளுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுபமான நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் வீட்டில் மீண்டும் நடக்கும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். யாரெல்லாம் உங்களை இகழ்ந்து இழிவாக பேசினார்களோ, அவர்கள் எல்லாம் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். உங்களுடைய நல்ல மனசு இன்று எல்லோருக்கும் புரியும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வயதானவர்கள் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. பொறுப்புகள் அதிகரிக்கும் போது கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்க தான் செய்யும். கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாட்களாக உங்கள் மீது விழுந்த பழி விலகும். கெட்ட பெயர் நீங்கும். உங்களுடைய நல்ல மனது அனைவருக்கும் புரியும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு உங்களுடைய வேலையை செய்வீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய பொறுப்புகளை முடித்து விடுவீர்கள். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சோகமான கவலையான நாளாக தான் இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களோடு சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கவனம் தேவை. சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திப்பதன் மூலம் மனசு கஷ்டப்படும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் தொல்லையிலிருந்து தப்பிப்பீர்கள். சொத்து சுகம் வாங்கவும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பெரிய பெரிய பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக பெருமூச்சு விடுவீர்கள். எதிரிகள் தொல்லையிலிருந்து தப்பிப்பீர்கள். குழப்பமான மனநிலை மாறும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தையும் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் சிக்கல்கள் வரலாம். சொத்து சுகம் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எதிலும் அவசரப்படாதீங்க கணவன் மனைவி அனுசரணை தேவை. பெரியவர்கள் பேச்சை கட்டாயம் கேட்பது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனது மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தேவை இல்லாத பிரச்சனைகள் நீங்கும். நிதி நிலைமை சீராகும். வாரா கடன் வசூல் ஆகும். பேங்க் பேலன்ஸ் உயரும். சந்தோஷப்படுவீங்க, அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். வீண் விரைய செலவை கட்டாயம் குறைக்க வேண்டும்.
Previous Post Next Post


Put your ad code here