மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். வாரா கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். எதிரி தொல்லை நீங்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற மன பயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சின்ன பதட்டம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். சொந்த பந்தங்களோடு பேசும் போது கவனமாக இருங்கள். வியாபாரத்தில் முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்ற மாட்டீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். கடன் சுமை குறையும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். ரொம்பவும் சோம்பேறித்தனமாக இருந்தவர்கள் கூட இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உடல் அசதி இருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற கோபம் அதிகமாக வரும். சின்ன சின்ன பிரச்சனைகளை கூட பேசிப் பேசி பெருசாக வாய்ப்புகள் உள்ளது. பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். அடம்பிடித்து எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்காதீர்கள். குறிப்பாக இளைஞர்கள் பெரியவர்கள் பேச்சை கேட்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்போடு இருப்பீங்க. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கு. வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கவனமாக நடந்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வரும். எதிரி தொல்லை இருக்கும். கவனமாக இருந்துக்கோங்க. அக்கம் பக்கம் வீட்டாரிடம் அனாவசியமாக பேசாதீங்க. உங்களுடைய குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரி தொல்லை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும் இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உடல் சோர்வு நீங்கும். மனசோர்வு நீங்கும். உற்சாகம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தேவையற்ற டென்ஷன் கோபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை அமையும். சொந்த பந்தங்களோடு பேசும் போது கவனம் தேவை. நிதானம் தேவை. பொறுமை தேவை. ஆத்திரத்தில் அறிவை இழக்கக் கூடாது, ஜாக்கிரதை.
Tags:
Rasi Palan