இன்றைய ராசிபலன் - 16.11.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். மேலதிகாரிகளால் நல்லது நடக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்துக்கோங்க. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள். எந்த பஞ்சாயத்துக்கும் போகாதீர்கள். குறிப்பாக வாழ்க்கைத் துணையோடு பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இன்று பொய் சொல்லுவதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் வெளிப்படும் நாள். உற்சாகமாக இருப்பீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் மனபாரத்தை இறக்கி வைப்பீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகமான நாளாக இருக்கும். உங்களுக்கான வரவேற்பு பெரிய அளவில் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும் நாள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிறைவை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு இருக்கலாம். ஆனால் அது சீக்கிரம் சரியாகும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி இன்று விஸ்வரூப வெற்றியை நிச்சயம் உங்களுக்காக கொடுக்கும். இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு. சுறுசுறுப்போடு செயல்படுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையில்லாத சிக்கல்கள் விலகும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீர்படும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்விர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று துணிச்சலான நாளாக இருக்கும். தேவையற்ற மன பயம் நீங்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். கொஞ்சம் கெட்ட பெயர் வந்தாலும் நல்லது நடக்கும் நாள். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று முன்கோபம் வேண்டாம். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக செலவு செய்யக்கூடாது. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். செலவு செய்வதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அனுபவ சாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத மன சஞ்சலங்கள் நீங்கும். உற்றார் உறவினர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கறாராக நடந்து கொள்ளுங்கள். யாருக்கும் பாவம் பார்க்க வேண்டாம். தேவையில்லாமல் ஏமாற வாய்ப்புகள் உள்ளது.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வீண்பழி விளக்கும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். தேவையில்லாத டென்ஷன் குறையும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக நடக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றத்தை அடைவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். கொஞ்சம் கௌரவம் பார்ப்பீங்க. எல்லார்கிட்டயும் சகஜமா பழகமாட்டிங்க. இதனால உறவுகளுக்குள் சின்ன சின்ன சஞ்சலங்கள் வர வாய்ப்பு உள்ளது. மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள். வேலையிலும் சரி வியாபாரத்தையும் சரி குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும்.
Previous Post Next Post


Put your ad code here