மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிதானம் தேவை. பொறுமையை இழந்தால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். கவனமாக இருங்கள். கோபம் வேண்டாம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருப்பதில் நல்லது. முக்கியமான வேலைகளை நாளை தள்ளி வையுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்படுத்த தேவை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் அவ்வப்போது வந்தாலும், பெரிய அளவில் எந்த பிரச்சனைகளும் இருக்காது.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். தேவையில்லாத பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தோடு மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆனால் அதிலிருந்து நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. எந்த விஷயத்திலும் பேராசைப்படக்கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புதுசாக சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இடமாற்றத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. நினைத்தது நடக்கும் நாள். மன நிம்மதி கிடைக்கும் நாள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தேவையில்லாத எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுற்றி இருப்பவர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தால் உஷாரா இருந்துக்கோங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் வெளிப்படும். இன்று உங்களை, பேசி யாராலும் ஜெயிக்கவும் முடியாது. போட்டி போட்டு ஜெயிக்கவும் முடியாது. எதிரிகளை வீழ்த்தும் நாள். இன்று, யாராவது ரொம்ப நாள் தொல்லை கொடுக்குறவங்க இருந்தாங்கன்னா அவங்கள சரி செய்ய வேலையை இன்றைக்கு பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தன்னடக்கம் வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், இந்த நாள் அமைதியாக செல்லும். மன அமைதி கிடைக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நீங்களே உற்சாகப்படுத்துவீங்க. சோம்பேறித்தனம் வந்தாலும், கடமையை முடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். சந்தோஷம் பிறக்கும். சாதனை படைக்கக்கூடிய அளவுக்கு உங்களுடைய விடாமுயற்சி வெளிப்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன ஏமாற்றங்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். பெரிய அளவில் எதிர்பார்ப்பு வச்சுக்காதீங்க. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யாதீங்க. அன்றாட வேலையை மட்டும் கவனம் செலுத்துங்கள். புது வேலை தேடுவதில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியைத் தரும்.
Tags:
Rasi Palan