18 ஆண்டுகளுக்கு பின் விருச்சிகத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் குவியும்..!!!


ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியாவார். செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் தைரியமானவராக, எதையும் துணிந்து செய்யக்கூடியவராக இருப்பார்.

இப்படிப்பட்ட செவ்வாய் அக்டோபர் மாத இறுதியில் தான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த விருச்சிக ராசியில் செவ்வாய் டிசம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார். இக்காலத்தில் செவ்வாய் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.

இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் நவம்பர் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் விருச்சிக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பான ஆசி கிடைத்து, அதன் விளைவாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படும். இப்போது செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். எதிர்பாராத நிதி ஆதாயங்களும் கிடைக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 3 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தைரியமும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை வழங்குவீர்கள். பல செய்திகளைப் பெறுவீர்கள். எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். லட்சுமி தேவியின் ஆசியால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். செல்வம் பெருகும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
Previous Post Next Post


Put your ad code here