இன்றைய ராசிபலன் - 18.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்ககூடிய நாளாக இருக்கும். கௌரவம் மரியாதை உயரும். பெரிய மனிதர்களின் பட்டியலில் உங்களுடைய பெயரும் இடம் பெறும். நீண்ட நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். பெரிய பெரிய ஆசைகள் மனதில் தோன்றும். உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய கனவு நிறைவேறும் நாளாகவும் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் நல்லது நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பார்த்த அளவு நன்மைகள் நடக்கவில்லை என்றாலும் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது. ஆசைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். பேராசை வேண்டாம். தெரிந்த விஷயங்களை மட்டும் செய்தால் போதும். தெரியாத புது விஷயங்களை பற்றி இன்று சிந்திக்க வேண்டாம்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். நிறைய நல்ல புது அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். புது மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிறைவை தரும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதிநிலைமை சீராகும். வருமானத்திலிருந்து வந்த தடை விலகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு வாய்ப்புகள் இருக்கு.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். கவலை வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அடுத்தவர்களுடைய உதவி தேவைப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மனது விட்டு பேசுங்கள். குறிப்பாக கணவன் மனைவி ஒருவருக்கொருவர் ஈகோ பார்க்க கூடாது. பொறுமையாக இருந்தால் இந்த நாள் இனிய நாளாக அமையும். முன் கோபத்தை கட்டாயம் குறைக்கணும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெற்றி காணும் நாளாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று கொஞ்சம் டென்ஷனான நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட அதிகமாக முன் கோபம் வரும். இதனால் நல்ல மனிதர்களை இழக்க வாய்ப்பு உள்ளது. கவனமாய் இருந்துக்கோங்க. நண்பர்களிடம் உறவுகளிடம் பேசும் போது நிதானம் இழக்கக்கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். மனதில் இருந்த குழப்பங்களை எல்லாம் வெளியே கொட்டி விடுவீர்கள். உங்களுடைய திறமையான பேச்சு தான் இன்று உங்களை காப்பாற்றி விடப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று சின்ன சின்ன தடங்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். நல்ல விஷயங்களை நாளை தள்ளி வையுங்கள். தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். பேசுவதை குறைக்கணும் பெரியவர்கள் பேச்சை கேட்கணும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை தான். உங்களை தேடி மரியாதை தானாக வரும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நல்ல பெயர் கிடைக்கும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். இறை வழிபாடு மனதிற்கு நிறைவை தரும்.
Previous Post Next Post


Put your ad code here