இன்றைய ராசிபலன் - 24.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நிதி நிலைமை சீராகும். மன நிம்மதி அடைவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை இன்று புது பொருட்களை பணம் கொடுத்து வாங்காதீங்க. யாரிடம் ஆவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன திருடு போகவும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான மனநிலை இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பமான பிரச்சனைக்கு கூட நல்ல முடிவை எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலை இல்லாமல் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. இருந்தாலும் இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் உங்களுக்கான நல்லது நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். எதிரி தொல்லை இருக்கும். குழப்பம் இருக்கும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அனுபவ சாலிகளோடு ஆலோசனை கேளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். உயர் அதிகாரிகளின் அனுசரணையான பேச்சு உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் ஆபரணங்களை வாங்கி மகிழுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. கடவுள் உங்களுக்காக சின்ன சோதனை வைக்க போகின்றான். என்று வைத்துக் கொள்ளுங்கள். சோதனைகளை தாண்டி வர வேண்டும் என்றால் நேர்மையாக இருக்க வேண்டும். குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. யாரிடமும் பொய் சொல்லாதீங்க. இறைவனின் மீது பாரத்தை போட்டு நன்மையை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினையாக இருந்து வந்த சூழ்நிலை மாறும். நல்லது நடக்கும். மனநிறைவை பெறுவீர்கள். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். விவசாயிகளுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கட்டுமான தொழில் நல்ல முன்னேற்றத்தை அடையும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடக்கூடாது. தேவையற்ற சிரமங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். புது மனிதர்களை முழுசாக நம்பாதீங்க. புது முயற்சிகளை மேற்கொள்ளாதீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். அதிகம் பேசாதீர்கள் நல்லது நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். இன்று என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதே சமயம் சின்ன ஏமாற்றத்தை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் இருக்கும். எல்லா விஷயத்திலும் கண்ட்ரோலாக இருக்க வேண்டும். குறிப்பாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். உறவுகளோடு பேசும்போது கவனமாக இருங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற கூலி, நல்ல பெயர் உங்களை வந்து சேரும். தேவையில்லாத மனம் சஞ்சலங்கள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். செலவை குறைத்துக் கொள்வது நல்லது.
Previous Post Next Post


Put your ad code here