இன்றைய ராசிபலன் - 26.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்று நம்புவீர்கள். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். கடவுளின் ஆசிர்வாதம் இன்று உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொள்வது நல்லது. பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்ற சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நிதிநிலைமை சீராகும் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம். மற்றபடி இந்த நாள் இனிய நாள்தான்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். புதுசாக பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். கொஞ்சம் நேரம் ஓய்வும் கிடைக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கஷ்டங்களைக் கண்டு துவண்டு போகக் கூடாது. துன்பங்களை கண்டு பயந்து போகக்கூடாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்த்து நின்று துணிந்து போராடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நிதானமாக இருங்க. முன்கோபம் வேண்டாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை நீங்களே ரசித்துக்கொள்ளும் அளவுக்கு இன்றைக்கு அழகான நாளாக இருக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. அதிகமாக பேசக்கூடாது. பெரியவர்களின் பேச்சை கேட்க வேண்டும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வு இருக்கும். கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியாக இருப்பீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்தீர்கள். நீண்ட தூர பயணங்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சுகம் வாங்கும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. நிதானமாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் மேலும் நல்லது நடக்கும். நிதிநிலைமை சீராகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
Previous Post Next Post


Put your ad code here