இன்றைய ராசிபலன் - 27.11.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். முதலீட்டின் போது கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். பணம், கொடுக்கல் வாங்கல் வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள். மன நிறைவு கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று திறமைசாலிகளாக செயல்படுவீர்கள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். எதிரிகளை தோற்கடிப்பீர்கள். முன்னேற்றம் நிறைந்த இந்த நாளை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். நல்லது நிரந்தரமாக உங்களிடம் தங்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். இறைவனின் அருளால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சின்ன அலைச்சல் உண்டாக வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடக்கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். அனாவசியமாக கைபேசி பார்க்காதீங்க.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முயற்சிகள் வெற்றி தரும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். உயரதிகாரிகளின் அனுசரணையால் நிறைய நல்லது நடக்கும். மன நிம்மதி கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி


கன்னி ராசி காரர்களை பொருத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம், வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். எதிரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தையும் கூடுதல் கவனம் இருக்கட்டும். புது முயற்சிகளை நாளை தள்ளி போடுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று அதிர்ஷ்டசாலிகளாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் நினைத்த நல்லது, நினைக்காத நல்லதை கூட கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். பல ஆச்சரியங்கள் இந்த நாளில் மறைந்திருக்கிறது. பலவிதமான பிரச்சனைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு மன நிம்மதி பெறுவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பயம் பதட்டம் இருக்கும். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். அவசரப்படக்கூடாது, குறிப்பாக இளைஞர்கள் இன்று பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமை வெளிப்படும் நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பொறுமையாக இருந்து சாதிப்பீர்கள். உங்களுடைய நிதானம், பல நன்மைகளை இன்று உங்களுக்கு செய்யப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். புது முயற்சிகள் வெற்றி தரும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் பெயர் புகழ் அந்தஸ்து உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். பயணங்களின் போது கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கடமை தவறாமல் நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.
Previous Post Next Post


Put your ad code here