ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். எனவே சூரியனின் கிரக மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். வரப்போகிற நவம்பர் 19 ஆம் தேதி சூரியன் சனிபகவானால் ஆளப்படும் அனுஷ நட்சத்திரத்திற்கு நகர்கிறார், மேலும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை அதே நட்சத்திரத்தில் நீடிக்கிறார்.
சூரியன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. குறிப்பாக இந்த நட்சத்திர பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப் போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அற்புதமான மாற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த கிரக பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். சூரியன் அருளால் உங்கள் செலவுகள் குறைந்து பெரிய அளவில் பணத்தை சேமிக்க முடியும். அதுமட்டுமின்றி குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால், உங்களின் அனைத்து முயற்சிகளிலிருந்தும் வெற்றியை எதிர்பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற பல சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் அனுஷ நட்சத்திரத்திற்கு செல்வதால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த நேரத்தில், சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும், மேலும் உங்கள் கடின உழைப்பு அதிக லாபத்தை ஈட்டும், மற்றும் உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் பல்வேறு துறைகளில் பெரிய வெற்றியை உறுதி செய்யும்.
பல்வேறு முதலீடுகளிலிருந்து அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் வணிகர்கள் வெவ்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்டலாம். திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், தம்பதிகள் ஒருவருக்கொருவர் தரமான நேரத்தை செலவிட முடியும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிரக பெயர்ச்சியால் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் அனைத்து திட்டங்களும் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்த பலன்களைத் தரும். சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும், மேலும் அவர்களின் பயணங்கள் அவர்களுக்கு பெரும் நன்மைகளைக் கொடுக்கும். அவர்களின் புத்திக்கூர்மை வலுவடைவதால் அவர்கள் பல்வேறு வழிகளில் வருமானத்தைப் பெறலாம்.
வேலையில் அவர்களின் முயற்சிகள் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வேலையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும், மேலும் வணிகர்கள் வெவ்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், மேலும் அவர்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.
மீனம்
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் மீன ராசிக்காரர்கள் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள்.ந்த ராஜயோகத்தின் இதனால் அவர்களின் காரணமாக அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடிவடையும். அவர்களின் பொருளாதார நிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இது வேலை செய்பவர்களுக்கு பல நேர்மறையான நன்மைகளைத் தருகிறது.
அலுவலகத்தில் நிலவி வந்த பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். அவர்களின் தனிப்பட்ட ஆசைகள் இப்போது நிறைவேறும். காதலர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய லாபங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Tags:
Rasi Palan
