பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை..!!!



அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணையின் முடிவு மற்றும் மீண்டும் ஆரம்பிக்கும் அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து அரச பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும். முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இம்மாத் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 246,521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94,004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340,525 ஆகும். மேலும் நாடளாவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளன. பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரையிலும் அனுமதிப்பத்திரங்கள் கிடைக்காதவர்கள் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Previous Post Next Post


Put your ad code here