கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்: வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி தெரிவிப்பு..!!!


கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடியும்.

இதற்கு முன்னர் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்து குடிவரவு பணிகளை முடிக்க வேண்டிய நிலை இருந்தது.

இலங்கைக்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவோரு சிறந்த வழிமுறையாகும் என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு நுழைவாயில் (E-Gate)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து கடவுச்சீட்டுகளையும் கொண்ட பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்

பல இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here