நீரிழிவு, உடல் பருமன் இருந்தால் இனி விசா இல்லையாம்..!!!


அமெரிக்காவில் வசிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அவர்களின் விசா நிராகரிக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களின்படி, இத்தகைய உடல்நிலை சிக்கல்கள் உள்ளவர்கள் அமெரிக்காவின் வளங்களுக்கு சுமையாக மாறக்கூடும் என்பதால், அவர்களின் விசா விண்ணப்பத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதய நோய்கள், புற்றுநோய்கள், சுவாச நோய்கள் மற்றும் மனநல பிரச்சினைகள் உட்பட பல நாள்பட்ட நோய்களுக்கு அதிக செலவு ஆகும் என்பதால், விண்ணப்பதாரரால் தனது முழு ஆயுட்காலத்திலும், அரசின் பண உதவியை நாடாமல் அந்த செலவுகளை சமாளிக்க முடியுமா என்பதை விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும்.

அதோடு விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர்கள் போன்ற குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும், இது அவர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்குமா என்பதையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பயிற்சி இல்லாத விசா அதிகாரிகள், தனிப்பட்ட சார்பு அடிப்படையில் ஊகங்களின் மூலம் முடிவெடுப்பது தவறானது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here