துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு..!!!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோதர தேவாலயத்தின் தலைவர் உயிரிழந்தார்.

உந்துருளியொன்றில் வந்த இனந்தெரியாத தரப்பினர் ரீ 56 ரக துப்பாக்கியினால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி தப்பிச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர், 54 வயதுடைய நிலந்த வருஷ விதாரண என தெரியவந்துள்ளது.

இவர், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இவர் அம்பலாங்கொடை - மோதர தேவாலயத்தின் தலைவர் பதவியையும் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here