இன்றைய ராசிபலன் - 01.12.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நிதானமான நாளாக இருக்கும். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செல்லும். மாதத்தில் முதல் நாள் என்பதால், இந்த நாளை இனிதாக கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சினைகள் நீங்கி சுமூகமான போக்கே நிலவும். மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்கள் கைக்கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் விலகி, உயர்வு காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். எதிரி தொல்லை நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். இந்த மாதத்தை சந்தோஷமாக வரவேற்பீர்கள். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் இருந்த நஷ்டங்கள் லாபகரமாக மாறும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன வருத்தம் இருக்கும். திருப்தி அடையாத சூழ்நிலை உண்டாகும். வேலைக்கு ஏற்ற வருமானம், வியாபாரத்திற்கு ஏற்ற லாபம் கிடைக்காததால் சின்ன அதிர்ப்தி அடைய வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் மனதை தளர விடக்கூடாது. தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி உங்களை வந்து சேரும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆழ்ந்த யோசனை சிந்தனை இருக்கும். வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியாது. தேவையற்ற சிந்தனை உங்கள் வேலையை கெடுக்க வாய்ப்பு உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். முதலில் வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பட்சத்தில் நல்லதே நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்
வருமானம் சீராகும். நிதி நிலைமை சீர்படும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாட்டு பயணங்கள் நல்லபடியாக அமையும். நல்லது நடக்கும் ‌.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உடல் சோர்வு இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். இதனால் சின்ன பின்னடைவு வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அன்றாட வேலையை மட்டும் சரிவர செய்தால் போதும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று சிக்கல்களை கண்டு குழம்ப கூடாது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் எதிர்த்துப் போராடினால் உங்களுக்கான வெற்றி, உங்களுக்கு கிடைக்கும். மூன்றாவது நபரிடம் பழகும் போது கவனமாக பழகுங்கள். உங்கள் குடும்ப விஷயங்களை அனாவசியமாக வெளி நவர்களிடம் பகிர வேண்டாம்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவையற்ற கஷ்டங்கள் உங்களை விட்டு தானாக விளக்கும். இந்த மாத துவக்க நாளிலேயே பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உள்ளது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கிவிடும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற சின்ன பயம் மனதில் ஏற்படும். குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலை உண்டாக்கும். அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகளால் பிரச்சினை வரும். வாக்குவாதம் வரும். கவனமாக இருக்க வேண்டிய நாள். இறை வழிபாடு செய்யுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை துவங்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
Previous Post Next Post


Put your ad code here