இன்றைய ராசிபலன் - 02.12.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நேரம் கை கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் இறுதியில் முடிவு உங்களுக்கு தான் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமை, நிதானம் தேவைப்படுகிறது. அவசரம் வேண்டாம். புது முடிவுகளை நாளை தள்ளி போடுங்கள். அவசரப்பட்டு கோபப்பட்டு இந்த முடிவையும் எடுக்காதீங்க. குறிப்பாக வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிதானம் இருக்கட்டும். மேலதிகாரிகளுடைய அனுசரணை தேவை.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். டென்ஷன் குறையும் நாள். மன நிம்மதி கிடைக்கும் நாள். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பண கஷ்டம் தீரும். வாரா கடன் வசூலாகும். சொத்து பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சின்ன சின்ன விஷயத்திற்கு முன் கோபம் வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத இடத்தில் தேவையில்லாத விஷயங்களை பேச வேண்டாம்.

சிம்மம்


சிம்ம ராசி காரர்களைப் பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் அவசரப்படுவீங்க, முன்கோபடுவீங்க, அடுத்தவர்களை எதிர்த்து பேசுவீங்க. இதனால் பெரிய பின் விளைவுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்துக்கோங்க. யாரையாவது பழி தீர்க்க வேண்டும் என்னும் கண்டிப்பாக வேண்டாம், ஜாக்கிரதை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மழையால் இதுநாள் வரை தடை பட்டிருந்த காரியங்கள் இன்று நல்லபடியாக நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உழைப்பு உயர்வு உற்சாகம் என்று இருப்பீர்கள். நீண்ட நாட்களாக செய்யாமல் விட்டு வைத்திருந்த வேலையை இன்று செய்து மன நிம்மதி அடைவீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நல்லது நடக்கும் நாள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். துணிச்சல் வெளிப்படும் நாள். தன்னம்பிக்கை தைரியம் வெளிப்படும் நாள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்தில் தடைகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நிதிநிலைமையில் பற்றாக்குறை வரலாம். இதுபோல சின்ன சின்ன பிரச்சனைகளை இன்று சமாளிக்க வேண்டும். பெரிசாக பாதிப்புகள் இல்லை.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சந்தோஷம் வெளிப்படும் நாள். அன்பு வெளிப்படும் நாள். காதல் வெளிப்படும் நாள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு தான். எதிலும் உங்கள் கை ஓங்கி இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பெரிய அளவில் பூகம்பம் போல வெடிக்க இருக்கும் பிரச்சனைகளை கூட, சின்னதாக ஊசி பட்டாசு போல சரி செய்து விடுவீர்கள். உங்களுடைய சாதுரியத்தால் இன்று நிறைய நன்மைகள் நடக்கப்போகிறது.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தடைகள் தடங்கல்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அநாவசியமாக பேச வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்க. பொய் சொல்லாதீங்க, நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.
Previous Post Next Post


Put your ad code here