இன்றைய ராசிபலன் - 03.12.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத அலைச்சலால் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். ஒரு வேலையில் கையை வைத்தால், அது சட்டு என்று முடிவுக்கு வராது. காரிய தடை இருக்கும். இதனால் மனதும் கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஜாக்கிரதையாக இருங்க. சிவன் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் பிறக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் துவங்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று ஆன்மீக ரீதியான ஈடுபாடு அதிகமாக இருக்கும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் எப்போதும் போல செல்லும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் கஷ்டங்கள் ஒரு முடிவுக்கு வரும். வேலையிலும் வியாபாரத்திலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கடன் சுமை குறையும். நிதி நிலைமை சீராகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதியான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று முடிவுக்கு வந்து விடுவீர்கள். பெருசாக இழப்புகளும் இல்லை. பெருசாக ஆர்ப்பாட்டமும் இல்லை. இந்த நாள் இனிய நாள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இறைவழிபாட்டில் மனதை ஈடுபடுத்துங்கள். அனாவசியமாக அடுத்தவர்களிடம் பேசாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் நிதானம் தேவை. நாளை நல்லதே நடக்கும் என்று எண்ணி, இந்த நாளை கடந்து செல்லவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எந்த இடத்தில் எல்லாம் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் எல்லாம் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். உற்சாகம் பிறக்கும் நாள். நம்பிக்கை கிடைக்கும் நாள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. செலவுகளை குறைப்பது நல்லது.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இந்த நாள் நகர்ந்து செல்ல போகிறது. நேர்மையாக இருப்பீங்க. நல்லவனாக இருப்பீங்க. உங்களை குறை சொல்ல ஒருவரும் வர முடியாது. நிறைய பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு கூட, இன்று மன நிம்மதி கிடைக்கும். இறையருள் கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷனான நாளாக இருக்கும். எந்த வேலையை எப்படி செய்வது என்று தெரியாது. வேலை பளுவும் ஒரு பக்கம் அதிகம் இருக்கும். கோபமும் அதிகமாக வரும். நிதானதோடு நடக்க வேண்டும் என்றால், மனதை ஒருநிலைப்படுத்தவும். இறை வழிபாடு செய்யவும். இந்த நாள் இனிய நாளாக இருக்க கடவுளை நாடுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று திறமையாக செயல்படுத்திர்கள். சுறுசுறுப்போடு இருப்பீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். ஒரு காரியத்தை உங்கள் கையில் கொடுத்தால் அதை கச்சிதமாக முடித்துக் கொடுத்து விடுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிறைய நன்மைகள் நடக்கும். வேலையில் உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபம் வேண்டாம். வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்லது நடக்கும் நாள். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். உங்களால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி பெரிய லாபம் பெரிய நஷ்டம் என்று எதுவும் இருக்காது சுமூகமான போக்கு நிலவும்.
Previous Post Next Post


Put your ad code here