இன்றைய ராசிபலன் - 04.12.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நீண்ட நாள் செய்ய முடியாமல் கிடப்பில் வைத்திருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். கவலைகள் மறக்கும் நாள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்திருக்கும் பொருட்களை மீட்டெடுப்பதற்கு வருமானம் கிடைக்கும். நீண்ட நாள் மன கஷ்டம் நீங்கும் நாள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, இன்று இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு இருக்கும். எதிலும் சின்ன குழப்பம் கூட வராது. புது முடிவுகளை எடுக்கலாம். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் இன்று வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். முதலீட்டில் இருந்து வந்த தடைகள் விலகும். வங்கி கடன் சுலபமாக கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் உயரும். மதிப்பும் மரியாதை உயரும். பதவி உயர்வும் சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். மன நிறைவான நாள் எதிரி தொல்லைகள் நீங்கும் நாள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வயதானவர்கள் குழந்தைகள் மழை இருக்கக் கூடிய நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எஇன்று சின்ன சின்ன காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எதிலும் அலட்சியம் வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். எந்த இடத்திலும் உங்களுடைய சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் நடப்பீர்கள். கெட்ட பெயர் எடுத்தாலும் பரவாயில்லை. பொய் சொல்லி தப்பிக்க மாட்டீங்க நேர்மையின் பக்கம் நிற்பீர்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். சுப செலவுகள் உண்டாகும்‌. வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளுடைய கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றவர்களுக்கு கவுரவம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கு. இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும். நீங்கள் செய்யும் இறை வழிபாடு பல மடங்கு புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும். பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்பட வேண்டும். எதிர்பாராத ஏமாற்றத்தால் சின்ன மன கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த இடத்திலும் சோர்வு அடையாதீங்க. பிரச்சனைகளை கண்டு பயப்படாதீங்க. இறைவழிபாடு செய்யுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் நண்பர்களோடு சேர்வதற்கும் வாய்ப்பு உள்ளது. பகை நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகள் நீங்கும். சந்தோஷம் பிறக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உங்களை தேடி பாராட்டும் பெயரும் புகழும் வந்து குவியும்‌. தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். தகுதிக்கு ஏற்ற சம்பளமும் உங்களை வந்து சேரும். இதுநாள் வரை இருந்து வந்த மன கஷ்டம் நீங்கி, இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். இருக்கும் வேலையை விட இன்னும் கொஞ்சம் நல்ல வேலை நல்ல சம்பளத்தோடு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வர வாய்ப்புகளை தவரவிட வேண்டாம். இறைவனின் பரிபூரண அருள் உங்களை வந்து சேரும்.
Previous Post Next Post


Put your ad code here