இன்றைய ராசிபலன் - 07.12.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது சந்தோஷமாக இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகளோடு சந்தோஷமாக கதை பேசி இந்த நாளை கழிக்க போகிறீர்கள். பழைய நினைவுகள் உங்களுக்கு நல்லதொரு சுகத்தை கொடுக்கும். துன்பங்கள் மறக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்கள் கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். இருந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று உங்கள் நேரத்தை செலவு செய்வீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலைகளை முடித்து விடுவீர்கள். கொஞ்சம் செலவு வரக்கூடிய நாளாக இருக்கும். உபயோகமான செலவாக இருக்கும். உங்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து மனதிருப்தி அடைவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடிந்து விடும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்தாலும் பிரச்சனைகள் பெருசாக இருக்காது. பெரியவர்களின் ஆசீர்வாதமும் பாராட்டும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியாக இருக்கப் போறீங்க‌. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். இன்று விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக டென்ஷன் இருக்காது. இறையருளால் இந்த நாள் உங்களுக்கு இனிதே அமைந்திருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். தலைகுனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகளை தோற்கடிக்க செய்வீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க இந்த நாள் உங்களுக்கு உதவி செய்யும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்கள் இன்று இறை வழிபாடு செய்ய வேண்டும். கஷ்டங்கள் வந்தால் கலங்கி நிற்கக்கூடாது. சிக்கல்களை பார்த்து மனதை சிதற விடக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தி கஷ்டங்களை எதிர்கொள்ளும் துணிவோடு நடந்தால் இந்த நாள் வெற்றி நிச்சயம் உங்களை தேடி வரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சினையை கூட உங்கள் பிரச்சினையாக எண்ணி தீர்த்து வைப்பீர்கள். உங்களுடைய கை ஓங்கி நிற்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வேலைகளை துவங்குங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று செய்யக்கூடிய வேலைகள் எல்லாம் நல்ல வேலை தான். உங்கள் மனது சுத்தமாக இருக்கும். வார்த்தையில் பொய் இருக்காது. மனதில் கள்ளம் கபடம் இருக்காது. மனதிற்குப் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக செயல்படுவீர்கள். கடவுள் உங்களுக்கான நல்லதை கொடுத்துக் கொண்டே இருப்பான். முடிந்தால் இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் மேலும் நன்மையை பெறலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் தேவை. பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். ஆர்ப்பாட்டம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். மனதில் எந்த வன்மமும் வேண்டாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். ஈகோ இல்லாமல் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலே உங்களுக்கு பிரச்சனையில் பாதி தீர்ந்துவிடும்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். பிரிந்த காதல் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள் சுப செலவுகள் உண்டு.
Previous Post Next Post


Put your ad code here