முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.