10 ஆண்டுக்கு பின் 2026-ல் உருவாகும் லாபதிருஷ்டி யோகம்: இந்த 3 ராசிக்கு ஜனவரியில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்..!!!


2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டின் முதல் மாதத்தில் பல கிரகங்கள் தனது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஜனவரி மாதத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும், நீதிமான் சனி பகவானும் சேர்ந்து ஒரு அற்புதமான யோகத்தை உருவாக்கவுள்ளனர். அதுவும் ஜனவரி 15 ஆம் தேதி சனி பகவானும், சுக்கிரனும் 90 டிகிரியில் இருந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.


முக்கியமாக இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் வருமானத்தில் நல்ல உயர்வுடன், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

2026 ஜனவரியில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

சிம்மம்

2026 ஜனவரியில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

மிதுனம்

2026 ஜனவரியில் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆளுமை மேம்படும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
Previous Post Next Post


Put your ad code here