இன்றைய ராசிபலன் - 11.12.2025..!!!


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் கிடைக்கும் நாள். பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாள். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போகிறது. அது உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்க. உங்களால் முடிந்தால் இயலாதவர்களுக்கு சின்ன உதவியை செய்யுங்கள் மேலும் நன்மைகள் பெறலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்த்து பொறாமைப்படக்கூடாது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முடிவுகளில் கவனமாக இருப்பீர்கள். பெரிய ஏமாற்றத்தில் இருந்து தப்பிப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, அல்லது உங்கள் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி பெரிய சிக்கலில் இருந்து விடுபடக் கூடிய நாள் இன்று. பெருமூச்சு விடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்காலத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக சேமிப்பை துவங்கலாம். புதுசாக நகை சீட்டு போடலாம். இதுபோல எல்லா நல்ல காரியத்தையும் இந்த துவங்குவதால் உங்களுக்கு லாபம் மட்டுமே எதிர்காலத்தில் கிடைக்கும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ரொம்ப ரொம்ப பணிவாக நடந்து கொள்வீர்கள். எந்த இடத்திலும் கோபப்பட மாட்டீர்கள். உங்களுடைய பணிவு உங்களை மேலும் உயர்த்தி நிற்க செய்யும். அடுத்தவர்களுடைய மனதை புரிந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நீண்ட நாள் மன பாரம் குறையும். குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். எதிரி தொல்லை நீங்கும். அவமானங்கள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். இறைவனின் பரிபூரண ஆசை இன்று உங்களுக்கு கிடைக்கும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புது விஷயங்கள் உங்களை தேடி வர போகிறது. அது வாழ்க்கை துணையாக இருக்கலாம், நல்ல நண்பர்களாக இருக்கலாம், நல்ல வாய்ப்புகளாக இருக்கலாம். பணம் நகை சொத்தாக கூட இருக்கலாம். எதுவோ ஒரு விஷயம் புதுசாக உங்கள் வாழ்க்கைக்குள் வரும். அது உங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும். வறுமை நீங்கும். நீண்ட நாள் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு உதவி செய்யும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகள் நீங்க கூடிய நாளாக இருக்கும். நிதிநிலைமை சீர் படும். கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று திறமையாக சிந்திப்பீர்கள். உங்களை நீங்களே நல்வழிப்படுத்தி கொள்வீர்கள். இதுநாள் வரை செய்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டு விடுவீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். நேரத்தினுடைய முக்கியத்துவத்தை புரிந்து நடந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் நல்ல அனுபவம் கிடைக்கும் நாள் இன்று.

மகரம்


மகர ராசி காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகள் ஒரு முடிவுக்கு வரும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலையிலும் வியாபாரத்தையும் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருப்பீர்கள். எந்த விஷயத்திற்கும் அவசரப்பட மாட்டீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்படி அமையும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கடமைகளை சீராக முடிப்பீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிம்மதி இருக்கும். எடுக்கும் முடிவில் ஒரு தெளிவு பிறக்கும். இந்த நாள் குழப்பங்கள் நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை பொருத்தவரை பொறுமை தேவை. அகல கால் வைக்காதீங்க. நிறைய முதலீடுகளை செய்யாதீங்க. மற்றபடி இந்த நாள் இனிய நாளாகவே இருக்கும்.
Previous Post Next Post


Put your ad code here