மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். தேவை இல்லாத செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. கையில் இருக்கும் இருப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன சங்கடங்கள் அவ்வப்போது வந்து போகத் தான் செய்யும். மன தைரியத்துடன் செயல்பட்டால் நிச்சயம் நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது, முன்கோபடக்கூடாது, வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலை, இருக்கும் வியாபாரத்தை கைவிடுவது அவ்வளவு சரியான முடிவு இல்லை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிரி தொல்லை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். நல்ல பண வரவு இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும் நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். பெரிய பெரிய பிரச்சனையில் இருந்து கூட சுலபமாக விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன தடைகளை தடங்கல்களை தாண்டி வெற்றி காண்பீர்கள். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். யார் மீதும் அனாவசியமாக சந்தேகப்பட வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்ககுணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை நீங்களே பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்கும். குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நன்மைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். துன்பங்கள் துயரங்கள் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. நட்பு காதலாக மலரும். காதல் திருமணம் வரை செல்லும். சுக செலவுகள் ஏற்படும். இறைவனுக்கு நன்றி செல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மனசோர்வு உடல் சோர்வு இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. மனதில் கவலைகள் நிறைந்திருக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எதிலும் தெளிவாக முடிவு எடுப்பீர்கள். அடுத்தவர்களை குறை கூற மாட்டீர்கள். உங்களுடைய பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வை கண்டுபிடிப்பீர்கள். சுய கௌரவம் மரியாதை கூடும் நாள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். பதட்டம் இருக்கும். செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். வேலையையும் வியாபாரத்திலும் முழு கவனத்தை செலுத்த முடியாது. உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். கவனத்தோடு இருக்க வேண்டிய நாள் இறைவழிபாடு செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். வாரா கடன் வசூலாகும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். கை நிறைய ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான சந்தோஷம், கிடைக்கும் நாளாக அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தோல்வி அடைந்த இடத்தில் வெற்றி அடைவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். நல்லது நடக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.
Tags:
Rasi Palan