மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு நல்ல தூக்கம், எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும், மனதிற்கு நிறைவாக நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். தன்னடக்கத்தோடு இருந்தால் எல்லாம் நிலையாக தங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு வெளிப்படும். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். மனதிற்குள்ளே வைத்திருந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி மன நிம்மதியை அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமை நிறைந்த நாளாக தான் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை நிலவும். பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலை வந்தாலும் மனதை தளர விடக்கூடாது. இறை வழிபாடு செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் வியாபாரத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும், அதை எல்லாம் கடந்து செல்லும் மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய சேமிப்புகளை துவங்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தைகளை செய்யலாம். நீண்ட தூர பயணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு ஒரு வெற்றி கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். பகை விலகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமைக்குறையும். வாரா கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்க வாய்ப்பு உள்ளது. வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். பொறுமையாக இருந்தால் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீக ரீதியான விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இறை வழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நிறைய உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். இருந்தாலும் கொஞ்சம் உடல் சோர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். எல்லா புது விஷயங்களையும் சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். புது நண்பர்கள் புது உறவுகளில் அறிமுகம் சந்தோஷத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புது முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலையில் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புத்திசாலித்தனத்தோடு நடந்து கொண்டால் அதிர்ஷ்டம் உங்கள் கையில் வந்து சேரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். சின்ன சின்ன உடல் உபாதைகள் இருக்கும். கொஞ்சம் ஓய்வு தேவைப்படும். அலைச்சலான விஷயங்களை செய்யாதீங்க. முடிந்த வேலைகளை செய்யுங்கள். எந்த இடத்திலும் பொய் சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் இன்று உண்மையை பேசுங்கள். நல்லதே நடக்கும்.
Tags:
Rasi Palan