மேஷ ராசிக்காரர்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கப் போகிறீர்கள். தேவையில்லாத விஷயங்களை சிந்தித்து நேரத்தை வீணடித்து வேலையை கெடுத்துக் கொள்ளாமல், மனதை ஒருநிலை படுத்த வேண்டும். இறை வழிபாடு செய்ய வேண்டும். கடமையிலிருந்து தவறாமல் இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்கவே கூடாது ஜாக்கிரதை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று எதிர்பாராத பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். பணக்கஷ்டம் தீரும். நீங்கள் நினைத்து பார்க்காத ஒரு நல்லது உங்கள் வாழ்க்கையில் நடக்கும். மன நிம்மதி கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வேளையிலும் வியாபாரத்தில் கவனத்தோடு செயல்படுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். எதிலும் உங்களுடைய கை மேலோங்கி நிற்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் இருந்து வந்த சுபகாரிய தடைகள் விலகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று உங்கள் வாழ்க்கையில் இன்று நடக்கப் போகிறது. அது உங்கள் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமான விஷயமாகவும் இருக்கும். பொறுமையை கடைப்பிடியுங்கள். அவசரம் வேண்டாம். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். அலட்சியம் இருக்கக்கூடாது. முன்கோபம் இருக்கக் கூடாது. கடமையிலிருந்து தவறக்கூடாது. குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க கூடாது. மற்றபடி அன்றாட வேளையில் கவனம் செலுத்த வேண்டும். தகாத நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையிலும் வியாபாரத்தையும் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று ஓய்வு இருக்கும். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். தேவையில்லாத அலைச்சலை இழுத்துப் போட்டுக் கொள்ளக் கூடாது. மன உறுதியோடு செயல்பட வேண்டும். பிரச்சனைகளை கண்டு பயந்து ஒதுங்க கூடாது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களை பொறுத்தவரை இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீக ரீதியான நாட்டம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் லாப நோக்கத்தோடு பார்ப்பீர்கள். ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். கொஞ்சம் சுயநலத்தோடு சிந்தித்தாலும் நல்லது நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும் நாள். சுயநலத்தால் சின்ன சின்ன மன கசப்பு, சின்ன சின்ன விரோதம் வர வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு இருக்கும். பெருசாக பாதிப்புகள் இருக்காது. குடும்பம், சந்தோஷம், இதோடு சேர்த்து வேலையிலும் கொஞ்சம் கவனம் செலுத்திடுங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். பணத் தேவை பூர்த்தியாகும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. சண்டை போடாதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எடுக்கும் முடிவுகளில் நிதானம் தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. பொறுமை இழக்கக் கூடாது. தேவையான அளவு மட்டும் பேச வேண்டும். உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. இறைவழிபாடு செய்யுங்கள். அளவோடு பேசுங்கள் நிறைய நன்மைகளை பெறுவீர்கள்.
Tags:
Rasi Palan