யாழில் மாணவன் கொடுத்த முறைப்பாடு ; 18 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா..!!!


யாழ்ப்பாணம் நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000.00 ரூபா நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாட்டுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்ப்பாணம் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவிவின் இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச செயலாளரால் அனுப்பட்ட அறிக்கையில், முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here