மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். பணக்கஷ்டம் தீரும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பெருமூச்சு விடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது கிடைக்கும். புது நண்பர்கள் வருகை உங்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நாமும் சீக்கிரம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஊக்கம் கிடைக்கக்கூடிய நாள். நல்ல வழிகள் பிறக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவு இருக்கும். செய்யும் வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக செய்வீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தோல்விகள் எல்லாம் வெற்றி படியாக மாறும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வாழ்க்கை பற்றிய சின்ன மன பயம், மனதிற்குள் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காதீங்க. நிச்சயம் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும். இறைவனின் மீது பாரத்தை போட்டு கடமைகளை மட்டும் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இறக்க குணம் வெளிப்படும் நாள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்க நிலவும். நிதிநிலைமை சீராக இருக்கும். மனதில் மகிழ்ச்சி இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகளை எல்லாம் தாண்டி வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நிறைய எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் இருக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அதையெல்லாம் வாழ்க்கைக்கு பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாமல், எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல ஓய்வு இருக்கும். நல்ல தூக்கம் இருக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். வேலையும் வியாபாரமும் அந்தந்த நேரத்திற்கு சரியாக நடக்கும். கைநிறைய லாபத்தை பெறுவீர்கள். நிதி நிலைமை சீராகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். உடல் உபாதைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு ஆர்வத்தை காட்டுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத நண்பர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு ஒரு தெளிவு பிறக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கவனமாக செயல்பட வேண்டும். புது முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் உஷாராக இருக்க வேண்டும். யாரையும் முழுசாக நம்பாதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். நிறைய புது விஷயங்களை இன்று நீங்கள் துவங்கலாம். புது முயற்சிகள் வெற்றி அடையும். செலவுகளை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.
Tags:
Rasi Palan