மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி வேலையும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும் நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் வருகை மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும் நாள். வேலையின் வியாபாரமும் சமூகமாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். மனதில் இனம் புரியாத ஒரு சோகம் வர வாய்ப்பு உள்ளது. மனதிற்கு பிடித்த பாடல் கேட்கும்போது, அல்லது மனதிற்கு பிடித்தவர்களிடம் பேசும்போது அந்த சோகம் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரையில் லாபம் நிறைந்த நாளாக இருக்கும். பயணங்கள் நன்மையை தரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். சோம்பேறித்தனம் படக்கூடாது. இன்றைக்கான வேலையை நாளைக்கு தள்ளி போடக்கூடாது. கடமையில் கண்ணும் கருத்துடன் இருந்தால், இந்த நாள் இனிய நாளாக அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நஷ்டம் கூட லாபமாக மாறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். தோல்வி அடைந்த இடத்தில், வெற்றி பெற்று காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். சோம்பேறி தனம் விலகி, சுறுசுறுப்பு அதிகமாக வெளிப்படும் நாள். வரும் நல்ல வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக அமையும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை வேலை பளுவை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூர்மையான பொருட்களை பயன்படுத்தும் போது கவனம் இருக்கட்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புது முயற்சிகள் வேண்டாம். அன்றாட வேலையை கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சுப காரிய பேச்சுக்கள் வேலைகளை நாளை தள்ளிப் போடுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஏதோ ஒரு மன வருத்தம் இருக்கும். சிந்தனை இருக்கும். வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியாது. தேவையற்ற நபர்களுடன் பேச வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். பிடித்த இறைவனை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை என்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் மனதில் நினைத்த நல்ல விஷயங்கள் நடக்கும். பணிவு வெளிப்படும் நாள். அடக்கத்தோடு இருப்பீர்கள். பொறுப்போடு நடந்து கொள்வீர்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.
Tags:
Rasi Palan