மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மையை வெளிப்படுத்துவீர்கள். நல்லது நடக்கும் நாள். மன நிம்மதி கிடைக்கும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வருந்தி குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும் நாள் இன்று.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நிதி நிலைமை சீராகும். நீண்ட நாள் மன வருத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்து வந்த வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நேர் வழியில் நடப்பீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சி செய்யுங்கள். முதலீட்டிற்கு தேவையான பணம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய பார்ட்னர்களின் சந்திப்பு நல்ல சூழலை உண்டு பண்ணும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சோம்பல் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வேலையை பொறுத்தவரை நிதானமாக இருக்க வேண்டும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். எதிரிகளோடு போட்டி பொறாமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடும் நாளாக இருக்கும். முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு இன்று கூடுதல் நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். வியாபாரமும் முன்னேற்ற பாதையில் செல்லும். கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த நடப்பது குடும்பத்திற்கு நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வேலையில் கவனம் இருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனை வேண்டாம். நேரத்தை வீணடிக்க கூடாது. கைபேசியை அதிக நேரம் பார்க்கக்கூடாது. குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க கூடாது. சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்ற ஆசையை விட்டிடுங்க. படிப்படியாக வரும் முன்னேற்றம் நிலையானது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். தேவையற்ற பிரச்சனையில் தலையிட மாட்டீர்கள். வம்பு வழக்குகள் உங்களை விட்டு தானாக விளக்கும். சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களோடு நட்புறவு வைத்துக் கொள்வது மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாசம் வெளிப்படும் நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இன்று முடியும். வேலையில் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனம் வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை கவனமாக செயல்பட வேண்டும். முதலீட்டில் கவனம் இருக்கட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். தேவையற்ற நஷ்டங்கள் கூட, அதிர்ஷ்டவசமாக லாபமாக மாறும். கூடுதல் சேமிப்பை பெறுவீர்கள். கடன் சுமை குறையும். சொத்து சுகம் சேர்க்கையும் இருக்கிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க இருக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் வர காத்துக் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் பாராட்டாக வரலாம், பணமாக வரலாம், அல்லது ஏதாவது ஒரு பொருளாகவும் பரிசாகவும் வரலாம். உயர் பதவிகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷம் இரட்டிப்பாகும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
Tags:
Rasi Palan