மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். மன நிம்மதியோடு இருப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும் நாள். தெளிவு கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். குடும்ப பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சந்தேகங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலையில் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். உங்களுக்கான நல்லது நிச்சயம் உங்களை தேடி வரும். பேராசைப்படக்கூடாது, இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்திலும் நிதானமாக நடக்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். எந்த விஷயத்திலும் அகல கால் வைக்க கூடாது. தெரியாத விஷயத்திலும் கால் எடுத்து வைக்கக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். விநாயகரை கும்பிட்டு இந்த நாளை துவங்கங்கள். நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முன் கோபப்படக்கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது. குறித்த வேலையை குறித்த நேரத்திற்குள் முடித்து விடுங்கள். சோம்பேறித்தனத்தை தூர தள்ளி வையுங்கள். அனுமனை கும்பிடுங்கள். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பணம் உங்கள் கையை வந்து சேரும். நிதி நிலைமை சீராகும். மன நிம்மதி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரையில் தனலாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். நீண்ட தூர பயணங்களை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான வேலையாக வெளியில் சென்றால் பிள்ளையாரை கும்பிட்டு போங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்காது. மந்த தன்மை வெளிப்படும். உடல் சோர்வு இருக்கும். வேலையில் பின்னடைவு உண்டாக வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்திலும் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் வாங்குவதும் வேண்டாம். நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இறை வழிபாட்டில் மனதை செலுத்துங்கள். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். வேலையில் முழு கவனம் தேவை. அடுத்தவர்களை முழுதாக நம்ப வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை நீங்களே கையில் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாட்னரோடு, வாடிக்கையாளரோடு வாக்குவாதம் வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். வாழ்க்கையில் முன்னேற சரியான வழி கிடைக்கும் நாள். புது மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மையை செய்யும். வேலையும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். காதல் கை கூடும். மனதிற்கு பிடித்த நபரை கைப்பிடித்து மன நிம்மதி அடைந்தீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இரக்க குணம் வெளிப்படும் நாள். உங்களுடைய மதிப்பு மரியாதை அந்தஸ்து சமூகத்தில் உயர்ந்து நிற்கும். பெரிய மனிதர்களின் வரிசையில் உங்கள் பெயரிடும் இடம்பெறும். வசீகரத் தோற்றம் பேச்சாற்றல் வெளிப்படும் நாள் இன்று.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். மன நிம்மதி கிடைக்கும் நாள். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். வியாபாரத்தில் முதலீட்டில் மட்டும் கவனம் தேவை. மற்றபடி லாபம் நிறைந்திருக்கும். பெண் பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும் பொன் பொருள் சேர்க்கை உண்டு.
மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பெருமையாக தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைப்பீர்கள். மன நிறைவான நாள் இன்று.
Tags:
Rasi Palan